சற்று முன் வவுனியா பஸ்நிலையம் முன்பாக சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம் 

வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று (18.01.2017) காலை 10மணியளவில் பொஹஸ்வாவே பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள் ஒன்றினைந்து அர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

தமது பகுதியில் நான்கு பிரதேச செயலாளர்களிடம் சேவைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளதால் அக்குறையினை நிவர்த்தி செய்யுமாறு தெரிவித்து சல்லிகம, சலனிமுகுமு , நாமவகம, நந்திமித்திரகம, போகாஸ்வவ பிரிவு ஒன்று மற்றும் இரண்டு போன்ற பகுதியில் வசித்தவரும் பொதுமக்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமது பகுதிக்கான பிரதேச செயலகத்தினை ஒன்றினைத்து ஒரு செயலகத்தில் சேவைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தத்தருமாறு கோரியே இவ் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், ஆண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like