செஞ்சோலைப் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

செஞ்சோலைப் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (14-08-2016) இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேற்படி நிகழ்வுகள் வள்ளிபுனம், முல்லைத்தீவில் (தாக்குதலுக்கு உள்ளான செஞ்சோலை வளாக வீதி) இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் செஞ்சோலை சிறுமிகள் காப்பகம் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ம் திகதியன்று ஸ்ரீலங்கா வான் படையினர் நடாத்திய குண்டுத் தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 61 பேர் உயிரிழந்ததுடன், 129 பேர் காயமடைந்திருந்தனர்.

மேற்படி படுகொலைக்கு நீதிகோரியும், உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You might also like