நல்லூரில் ஹெரோயினுடன் கைதான இளைஞனுக்கு விளக்கமறியல்

யாழ். நல்லூரில் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை(11) உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நல்லூர் மூத்த விநாயகர் ஆலயப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்ற இளைஞனைக் கைது செய்து விசாரணை நடாத்தியதில் குறித்த இளைஞன் தனது அந்தரங்க உறுப்பினுள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டிருந்தார்.

You might also like