தேசிய பாடசாலை ஆசிரியர்கள் பத்தாயிரம் பேருக்கு இவ்வருடத்தில் இடமாற்றம்

தேசிய பாடசாலையொன்றில் 10 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றிவரும் பத்தாயிரம் ஆசிரியர்களுக்கு இவ்வருடம்  முடிவடைவதற்குள் இடமாற்றம் வழங்குவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்விவகாரம் தொடர்பில் அவ்வமைச்சு ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டுக்கு வந்துள்ளது

எனவே ஆசிரிய இடமாற்றம் தொடர்பில் அவ்வவ் மாகாணங்களில் ”ஆசிரிய இடமாற்ற சபை” நிறுவுவதற்கும் கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆகவே அச்சபையூடாக குறித்த இடமாற்றங்கள் நடைபெறவுள்ளது. மேலும் குறித்த ஆசிரிய இடமாற்ற நடவடிக்கைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதும் முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like