ஐந்து பிள்ளைகள் பெற்றும்.. விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வயதான தம்பதி

தமிழ்நாட்டின் அவிநாசியில் வயதான தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அவிநாசி சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் கணபதி(வயது 90), இவரது மனைவி வள்ளியம்மாள்(வயது 86).

இவர்களுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர், இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.

2வது மகன் மட்டும் பெற்றோரை அவ்வப்போது கவனித்து வந்துள்ளார். வயதான காரணத்தினால் வள்ளியம்மாளால் கடந்த நான்கு ஆண்டுகளாக நடக்க முடியவில்லை.

கணபதியாலும் கவனித்துக் கொள்ள முடியாத காரணத்தினாலும், இருவரும் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

வழக்கம்போல் 2வது மகன் பெற்றோர் வீட்டுக்கு சென்ற போது இருவரும் சடலமாக கிடந்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர், இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

You might also like