கார் ஓட்டிய கர்ப்பிணி பெண்: சாலையில் நிகழ்ந்த விபரீத சம்பவம்

சுவிட்சர்லாந்து நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவர் கார் ஓட்டியபோது நிகழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுவிஸின் Graubunden மாகாணத்தில் உள்ள Maienfeld என்ற பகுதியில் தான் இத்துயரச சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று காலை 10.30 மணியளவில் 24 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் காரை ஓட்டிச்சென்றுள்ளார்.

சில மணி நேரத்திற்கு பின்னர் , சாலையில் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

எதிர்பாராத தருணத்தில் கார் சாலையை விட்டு விலகி வேலியை உடைத்துக்கொண்டு அருகில் இருந்து விவசாய தோட்டத்தில் சறுக்கிக்கொண்டு சென்றுள்ளது.

இவ்விபத்தில் கார் முற்றிலும் சேதம் அடைந்தது. கர்ப்பிணியை காப்பாற்ற நபர்கள் இல்லாததால் அவரே காரை விட்டு வெளியேறியுள்ளார்.

பின்னர், விபத்து குறித்து தகவல் அறிந்த ஆம்புலன்ஸ் ஒன்று கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதித்ததை தொடர்ந்து தற்போது அபாயக்கட்டத்தில் இருந்து அவர் மீண்டுள்ளார்..

You might also like