பச்சிளம் சிசுவை புதைத்து வைத்த இரு பெண்கள் கைது

தலவாக்கலை, லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை ஏழாம் இலக்க கொலனியில் பிறந்த சிசுவை யாருக்கும் தெரியாமல் புதைத்த இரு பெண்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

லிந்துலை பகுதியில் நேற்று முன்தினம் பிறந்த பச்சிளம் சிசு ஒன்றை சிசுவின் தாயாரும், பாட்டியும் இணைந்து புதைத்து வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்த லிந்துல பொலிஸார் குறித்த சிசுவின் தாயையும், சிசுவின் பாட்டியையும் இன்றைய தினம் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த விசாரணைகளின் பின்னர் சிசுவின் தாய் லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் நாளைய தினம் நுவரெலியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக லிந்துல பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like