சீனாவின் ஆதிக்கப் பகுதியில் கால்பதிக்கும் இந்தியா: மத்தள விமான நிலையத்தை கைப்பற்ற வியூகம்

சீனாவின் செல்வாக்கிற்குள் இருக்கும் இலங்கையின் தென் பகுதிக்குள் கால் பகுதிக்கும் முயற்சில் இந்தியா இறங்கியுள்ளது.

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தள ராஜபக்ச சர்வதேச விமானநிலையத்தை கையேற்க இந்திய நிறுவனமொன்று முன்வந்துள்ளதாக இந்தியாவின் த ஹிந்துநாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தில் 205 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதுதொடர்பான இந்திய அரசாங்கத்தின் யோசனை இலங்கை அரசாங்கத்திடம்கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்;ளது.

இதனூடாக மத்தள விமான நிலையத்தின் 70 சதவீத உரிமையை 40 வருட காலத்துக்குபெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

இதில் இலங்கை அரசாங்கம் 88 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையில் முதலீடுசெய்ய வேண்டும் என இந்தியா எதிர்பார்த்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த யோசனை தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை நியமிப்பதற்குபோக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால், கடந்த அமைச்சரவைகூட்டத்தின்போது முன்வைக்கப்பட்ட யோசனை அங்கீகரிக்கப்பட்டதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா ஆதிக்கமுள்ள இலங்கையின் தென் பகுதியில் அமைந்துள்ள மத்தள விமான நிலையத்தில்முதலீடு செய்ய இந்தியா முன்வந்துள்ளமை ஓர் உபாயமாக கருதப்படுவதாகவும்குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like