வடக்கு மாகா­ணத்­தில் இம்­முறை விதை நெல்லைத் துப்புரவு செய்வதற்கு நடமாடும் சேவை

வடக்கு மாகா­ணத்­தில் இம்­முறை பெரும்­போக நெற்­செய்­கை­யின்­போது விவ­சா­யி­க­ளுக்கு நட­மா­டும் நிலை­யங்­கள் மூலம் விதை­நெல்லை துப்புர­வாக்­கும் வசதி செய்­து­கொ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது என வடக்கு மாகாண விவ­சா­யப்­ப­ணிப்­பா­ளர் எஸ்.சிவ­கு­மார் தெரி­வித்தார். இது­தொ­டர்­பாக அவர் மேலும் தெரி­வித்ததா­வது:

இந்த வரு­டம் நட­மா­டும் விதை­நெல் துப்­ப­ர­வாக்­கும் பிரி­வு­கள் மூலம் விவ­சா­யி­க­ளுக்கு மானிய உத­வி­யு­டன் விதை­நெல் துப்­பு­ரவு செய்து வழங்­கப்­ப­ட­வுள்­ளன. விவ­சா­யி­கள் இந்­தச் சேவையை உரிய முறை­யில் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­வேண்­டும்.

விதை­நெல் துப்­பு­ர­வாக்­கும் சேவை வடக்கு மாகா­ணத்­தில் உள்ள ஐந்து மாவட்­டங்­க­ளி­லும் சம­கா­லத்­தில் நடை­பெ­றும். கடந்த காலங்­க­ளில் விதை நெல்­லைத் துப்­பு­ரவு செய்­வ­தற்­காக விவ­சா­யி­கள் குறித்த நிலை­யங்­களை நாடிச்­செல்ல வேண்­டிய நிலை இருந்­தது.

இதனால் அவர்­கள் பல்­வேறு நெருக்­க­டி­க­ளைச் சந்­தித்­த­னர். இத­னைக் கருத்­தில் கொண்டு இந்த வரு­டம் நட­மா­டும் நிலை­யங்­கள் மூலம் விதை­நெல்லை துப்­பு­ர­வு­செய்து வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னிக்­க ப்­பட்­டுள்­ளது. இந்­தச்­சேவை பதிவு செய்­யப்­பட்ட இளை­ஞர் விவ­சா­யக்­க­ழ­கங்­க­ளின் உத­வி­யு­டன் முன்­னெ­டுக்­கப்­ப­டும்.

விதை­நெல்லை உரி­ய­மு­றை­யில் துப்­பு­ரவு செய்­வ­தன் மூலம் முளை­தி­றன் வீதம் அதி­க­ரிக்­கும், விளைச்­ச­லும் அதி­க­ரிக்­கும். எனவே, விவ­சா­யி­கள் விதை­நெல்லை உரி­ய­மு­றை­யில் துப்­பு­ர­ வாக்­கிப் பயன்­ப­டுத்­த­வேண்­டும். இது தொடர்­பான மேல­திக விவ­ரங்­களை மாவட்ட விவ­சா­யத் திணைக்­க­ளம், பிர­தேச விவ­சா­யப் போத­னா­சி­ரி­யர்­கள் மற்­றும் தமது பிர­தே­சத்­தில் உள்ள இளை­ஞர் விவ­சா­யக் கழ­கங்­க­ளு­டன் தொடர்­பு­கொண்டு அறிந்து கொள்­ள­ மு­டி­யும்– – என்­றார்.

You might also like