குற்றச்செயல்கள் தொடர்பில் மக்கள் தகவல்களை வழங்க விசேட நடவடிக்கை!

போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விசேட நடவடிக்கைப் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிரடிப்படை தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த விசேட நடவடிக்கைப் பிரிவு 24 மணி நேரமும் செயற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

011 2580518, 0112058552 அல்லது 0112081040 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு மேலதிகமாக 0112081044, 0112588499 என்ற தொலைநகல் மூலமாகவும் தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

You might also like