யானையின் தாக்குதலில் பாகன் பரிதாபமாக பலி!

ஹொரணை, மொரகாஹேன பிரதேசத்தில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான பாகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் மொரகாஹேன, கன்னங்கர பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த யானைத் தாக்குதலின் போது மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய குறித்த யானையின் பாகனே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like