செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட மாணவர்களின் 11ஆம் வருட நினைவஞ்சலி

கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுவீச்சில் செஞ்சோலை வளாகத்தில் பலியான மாணவர்களின் 11ஆம் வருட நினைவஞ்சலி இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த நினைவஞ்சலி அனுஷ்டிப்பு, படுகொலை நடந்த இடமான செஞ்சோலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

You might also like