யாழிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற ஆறு பேருந்துகள் கிளிநொச்சி பொலிஸாரிடம் சிக்கியது

யாழிலிருந்து கொழும்பு நோக்கி வழி அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்த, தனியாருக்கு சொந்தமான ஐந்து அதி சொகுசுப் பேருந்துகளும், அரை சொகுசுப் பேருந்து ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்னவின் ஆலோசனையின் கீழ் அவருடைய விசேட குழுவினர் நேற்று ஆணையிறவு முதல் கொக்காவில் வரை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த ஆறு பேருந்து சாரதிகளுக்கும் எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

You might also like