வவுனியா சேமமடு கிராமிய வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா

வவுனியா சேமமடு கிராமிய வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (14.08.2017) காலை 10.00மணிக்கு மேமமடு கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் தலமையில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் வேண்டுகோளிக்கினங்க மத்திய புனர்வாழ்வு அமைச்சின் சுமார் 5மில்லியன் ரூபா நிதியில் இவ் வைத்தியசாலை கட்டப்படுகின்றது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் , இந்து இளைஞர் சங்கத்தலைவர் நா.சேனாதிராஜா, முன்னாள் பிரதேசசபை தலைவர் க.சிவலிங்கம், ப.சத்தியசீலன், பா.சிந்துஜன், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like