கிளிநொச்சி மாணவர்களுக்கு குடிநீர் போத்தல்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டு இருக்கும் வறட்சியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள 15 இற்கும் மேற்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு பாரிய பிரச்சினையாக உள்ளது.

இதனால் இந்த பகுதி மக்கள் தூர பிரதேசங்களுக்கு சென்று குடிநீரை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை கருத்தில் கொண்டு இலங்கை செஞ்சிலுவைச்சங்க கிளிநொச்சிக் கிளையினர், உதவும் உறவுகள் அமைப்பின் நிதி உதவியுடன் குடிநீர் போத்தல்களை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைத்துள்ளனர்

குறித்த திட்டத்தின் 4ஆம் நாளான இன்று பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பூநகரி மத்திய கல்லூரியில் க.பொ.த. உ.த பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அடைக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், பரீட்சை நிறைவடையும் வரை தொடர்ந்தும் மாணவர்களுக்கு குடிநீர் போத்தல்கள்வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like