வவுனியாவிலிருந்து நல்லூர் நோக்கிய நடைபவனி பாதயாத்திரை ஆரம்பம்

வருடாந்தம் நடைபெறும் வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து பக்தர்களின் பாதயாத்திரை நடைபவனி இன்று 14.08.2017 ஆலய தர்மகர்த்தா செல்வி ஜெயராணி  தலைமையில் ஆரம்பமானது. 20.08.2017 ஞாயிற்றுக்கிழமை இரதோற்சவ பெருநாளில் இந்த பாத யாத்திரை நல்லூர் ஆலயத்தை சென்றடைய உள்ளது. இன்று காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

அந்தனர் ஒன்றியசெயலாளர் சிவஸ்ரீ.நா.பிரபாகரக்குருக்கள் , சிவஸ்ரீ சிவகுருநாதக்குருக்கள் , சிவஸ்ரீ கிரிதரக்குருக்கள் எனப் பல சிவாச்சாரியார்களும் நிகழ்வில் கலந்து ஆசியுரைகளை வழங்கினர் .

மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் பண்டிதர் பிரதீபன் இந்து கலாச்சார உத்தியோகத்தர்கள் திருமதி கிரிஜா ,சிவஸ்ரீ குகனேஸ்வர சர்மா , சிவகஜன் ,கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தாட்சாயினி, வைத்தியர் இராமச்சந்திரன் , திரு.தர்மபாலன் , சைவமணி சண்முகரட்ணம் ஆகியோர்உரை நிகழ்த்தினர் .

தமிழ் விருட்சம் சந்திரகுமார் கண்ணன் , வாடி வீடு உரிமையாளர் கதிர்காமராஜா புதூர் நாகதம்பிரான் தலைவர் கிருபாகரன் , அன்பக உறுப்பினர் கனேஸ் , சசிகரன் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் அன்பக சிறுவர் இல்ல நிர்வாக உறுப்பினர்கள் பக்தர்கள் எனப்பலரும் கலந்து நிகழ்வைச்சிறப்பித்தனர் .

You might also like