கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கிவைப்பு

கடந்த 2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் கொண்டுவரப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக புனர்வாழ்வுபெற்ற போராளிகள், யுத்தத்தில் இறந்த போராளிகளது குடும்பங்கள், தடுப்பில் உள்ள அரசியல் கைதிகளது குடும்பங்கள் மற்றும் ஏனைய போராட்ட குழுக்களில் இருந்து இறந்தவர்களது குடும்பங்கள் ஆகியோரை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் நோக்கோடு ஆரம்பித்த குறித்த ஒவ்வொரு குடும்பத்திற்குமான தலா 50,000 பெறுமதியான வாழ்வாதார உள்ளீடுகளை வழங்கும் உதவித்திட்டத்தினூடாக 2016 ஆம் ஆண்டு பயனாளிகளுக்கான திட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டுவருகின்றது.

அதன் அடிப்படையில் 2016 இற்கான திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 87 குடும்பங்களுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 92 குடும்பங்களுக்குமாக இதுவரை வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கப்பட்டுள்ளது, கிளிநொச்சியில் மிகுதியாக உள்ள 13 குடும்பங்களுக்கும் முல்லைத்தீவில் 08 குடும்பங்களுக்குமான வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வுகள் 16,17-01-2017  ஆகிய திகதிகளில் மாவட்ட செயலகங்களில் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களது தலைமையில் இடம்பெற்றது.

You might also like