பாலியல் தொழில் நிலையம் முற்றுகை! பெண்கள் சிலர் கைது

உடற்பிடிப்பு நிலையம் என்ற பெயரில் நாவல பிரதேசத்தில் இயங்கி வந்த பாலியல் தொழில் நிலையத்தை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

அத்துடன் அதன் முகாமையாளர் உட்பட 4 பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம், தனமல்வில, எம்பிலிப்பிட்டிய, உடபுஸ்சல்லாவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பெண்கள் தாம் கொழும்பில் தொழில் புரிந்து வருவதாக தமது குடும்பத்தாருக்கு கூறியுள்ளனர்.

2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபா வரை அறவிட்டு இந்த பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர், அவர்கள் தொடர்பில் மருத்துவப் பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன் பெண்களை பிணையில் விடுவித்துள்ளனர்.

You might also like