உயர்தர பரீட்சை வினாத்தாள் கொண்டு சென்ற வாகனம் விபத்து

தற்போது நடைபெற்று வரும் கபொத உயர்தர பரீட்சைக்கான வினாத்தாள்களை கொண்டு சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.

உயர் கல்வி அமைச்சில் இருந்து பதுளை உயர் தொழில்நுட்ப நிறுவனம் நோக்கி வினாத்தாள் கொண்டு செல்லப்பட்ட வாகனமே விபத்துக்குள்ளாகி உள்ளது.

உயர் கல்வி அமைச்சிற்கு சொந்தமான வேன் பதுளை – பண்டாரவெல வீதியின் உடுவர 6ஆம் மைல்கல் பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த வாகனம் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மதிலில் மோதுண்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த சாரதி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேனில் இருந்த வினாத் தாள்கள் பாதுகாப்பாக உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள பரீட்சை மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையினால் இந்த விபத்து இடம்பெற்றள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like