கிளிநொச்சியில் இராணுவத்தினர் வசமிருந்த 38 ஏக்கர் காணி விடுவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 38 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த 38 ஏக்கர் காணி விடுவிப்பு தொடர்பிலான ஆவணங்களை இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்திருந்தனர்.

கரைச்சி, கண்டாவளை பகுதியில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவை இனம் காணப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலாளர்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இதன்போது கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர்களும் அங்கு இருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

You might also like