மரத்திலிருந்து விழுந்து மூன்று பிள்ளைகளின் தந்தை பலி

அக்கரப்பத்தனை – டொரிங்டன் தோட்டத்தில் குடும்பஸ்தரொருவர் சவுக்கு மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், இதில் 42 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான எம்.ஜெயரட்ணம் என்பவரே உயிரிழந்துள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் சவுக்கு மரத்தில் ஏறியபோது தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டதாலேயே உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் அக்கரப்பத்தனை வைத்தியசாலையிலிருந்து, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like