இதற்காகவா காதலித்தேன்! ராணுவ வீரரை இழந்த நிலையில் கதறும் கர்ப்பிணி மனைவி

ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் இளையராஜா வீரமரணமடைந்தார்.

இவரது உடல் இன்று சொந்த ஊரான காளையார்கோயில் அருகே கண்டனியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்று கோகுலாஷ்டமி திருவிழாவுக்காக ஊரே மகிழ்ச்சியாய் தயாராகிக் கொண்டிருந்த வேளை இளையராஜாவின் மரணம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுவயது முதலே கஷ்டப்பட்ட இளையராஜாவின் குடும்பம், தற்போது தான் முன்னேறத் தொடங்கியதாம்.

ராணுவத்தில் சேர்ந்து நான்கு வருடங்கள் ஆன நிலையில், திருமணம் முடிந்து வெறும் ஒரு வருடமே.

இவரது மனைவி செல்வி கர்ப்பிணியாக இருக்கிறார், சனிக்கிழமை காலையன்று போன் செய்து ஊர் திருவிழாவை சிறப்பாக கொண்டாடுங்கள், இங்கே சண்டை நடக்கிறது என கூறினாராம்.

அன்றிரவே குண்டடிப்பட்டு பரிதாபமாய் பலியாகினார், அவர் மனைவி கூறுகையில், கடந்த மாதம் ஊருக்கு வந்த போது கூட என்னை அழைத்து செல்வதாய் கூறினார்.

இப்படி தவிக்கவிட்டு சென்றுவிட்டாரே, இதற்காக தான் காதலித்து திருமணம் செய்தேனா? என அவர் கதறி அழுதது ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

You might also like