சுதந்திர தின விழாவில் பங்கேற்ற 12 வயது சிறுமி கற்பழிப்பு

இந்தியாவில் சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய 12 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களின் தலைநகரான சண்டிகார் நகரில் தான் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சண்டிகாரில் உள்ள section 13 என்ற பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 வயது சிறுமி 8-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இப்பள்ளியிலும் கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடந்துள்ளது.

விழாவில் சில முக்கிய பொலிஸ் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், விழாவை முடித்துவிட்டு 1.5 கி.மீ தூரமுள்ள தனது வீட்டிற்கு அச்சிறுமி நடந்து சென்றுள்ளார்.

வீட்டிற்கு செல்லும் வழியில் குழந்தைகள் பூங்கா ஒன்றிற்கு அருகில் சென்றபோது திடீரென மர்ம நபர் ஒருவர் சிறுமி மீது பாய்ந்து கற்பழித்துவிட்டு தப்பியுள்ளார்.

வீட்டிற்கு அழுதுக்கொண்டு வந்த சிறுமி நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இக்கற்பழிப்பு தகவல் அறிந்த பொலிசார் பள்ளியில் இருந்து விரைவாக சென்று சிறுமியை சந்தித்துள்ளனர்.

சிறுமியிடம் விசாரணை செய்ததில் கற்பழித்தவர் 40 வயதுள்ளவராக இருப்பார் என தெரியவந்துள்ளது.

பூங்காவிற்கு அருகில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கமெராவை பொலிசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் சண்டிகார் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like