7 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்: 7 பேருக்கு மரண தண்டனை

இந்தியாவில் மந்திர சக்தி பெறுவதற்காக 7 வயது சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில், 7 பேருக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தின், யவாட்மால் மாவட்டத்தில் உள்ள சோராம்பிய கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மந்திர சக்திகளை பெற வேண்டும் என்பதற்காக, சிறுமியின் தலையை கொடூரமாக துண்டித்து நரபலி கொடுத்துள்ளனர்.

அதன் பின் இது தொடர்பான விவகாரம் பொலிசாருக்கு தெரிய வந்ததால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இது தொடர்பாக பொலிசார் 8 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை ஈவிரக்கமின்றி கொன்ற 7 பேருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.

You might also like