தனது மகளின் கணவர் தன்னை மதிப்பதில்லை: வவுனியா ரயில் தண்டவாளத்தில் ஒருவர் தற்கொலை முயற்சி 

வவுனியா, மன்னார் வீதி புகையிரதக் கடவைக்கு அண்மித்ததாக புகையிரதத்தில் தற்கொலை செய்ய முன்ற குடும்பஸ்தர் ஒருவரை அப்பகுதியில் கடமையில் இருந்த புகையிரத கடவைக் காப்பாளர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 7.20 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா – மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயத்திற்கு அண்மித்ததாக அமைந்துள்ள புகையிரததக் கடவைக்கு அண்மித்ததாக உள்ள புகையிரதப் பாதையில் வயது முதிர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நீண்ட நேரமாக படுத்திருந்திருந்துள்ளார். இதனை அவதானித்த அயலில் வசிப்பவர்கள் அவரை அவ்விடத்தில் இருந்து அகற்ற முயன்ற போது அவர் மறுப்பு தெரிவித்ததுடன், தான் தற்கொலை செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா – மன்னார் வீதி புகையிரதக் கடவையில் கடமையில் இருந்த உத்தியோகத்தருக்கு தொயப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற உத்தியோகத்தர் அவரை அங்கிருந்து கட்டாயப்படுத்தி அகற்றி புகையிரதக் கடவை காப்பாளரின் அறைக்கு அழைத்து வந்தார். இதன்போது அங்கு நின்றவர்கள் இது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையம் மற்றும் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் உள்ள தமிழ் மொழி மூல அவசர தொலைபேசி இலக்கம் என்பவற்றுக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வவுனியா பொலிசார் குறித்த நபரை மீட்டதுடன் அவர் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்தையடுத்தும் மது போதையில் இருந்தமையினாலும் அவரை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதேவேளை, தனது மகளின் கணவர் தன்னை மதிப்பதில்லை எனத் தெரிவித்தே குறித்த குடும்பஸ்தர் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்ததுடன், வவுனியா, கல்நாட்டியகுளம் பகுதியில் வசித்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like