17 வருடங்களின் பின் இந்திய இராணுவத்தினருக்கு வடக்கில் அஞ்சலி

விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்ட இந்திய இராணுவத்தினருக்கு 17 வருடங்களுக்கு பின்னர் வடக்கில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

1987 – 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொலை செய்யப்பட்ட இந்திய இராணுவத்தினருக்காக கல்வியங்காட்டு இராச பாதையில் பிடாரித்தோட்டம் பகுதியில் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

குறித்த நினைவுத்தூபி 17 வருடங்களாக கவனிப்பாரற்று இருப்பதுடன், தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலேயே இந்த தூபி உள்ளது.

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வரும் இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் குழுவினர் இந்த நினைவுத் தூபியில் நினைவஞ்சலி செலுத்தவுள்ளனர்.

இதற்காக 17 ஆண்டுகளாக கைவிடப்பட்டிருந்த குறித்த நினைவுத் தூபியை சுத்தம் செய்யும் பணியில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

You might also like