இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் கிளிநொச்சி கிளையினால் பயிற்சி வகுப்புக்கள்

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி கிளையினால் ஆங்கிலம், சிங்களம் மற்றும் முதலுதவி அனர்த்த முகாமைத்துவம் ஆகிய அறிவு மற்றும் திறன்சார் பயிற்சி வகுப்புக்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்டுள்ள பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்டு பயிற்சி நெறியை முழுமையாக பூர்த்தி செய்யும் அனைவருக்கும் பெறுமதியான சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

எனவே குறித்த பயிற்சி வகுப்புக்களில் பங்கு கொள்ள ஆர்வம் கொண்டுள்ளவர்கள் இலங்கை செஞ்சிலுவைச்சங்க கிளிநொச்சிக்கிளை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்யமுடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பதிவு செய்ய விரும்புபவர்கள் 021-2285843 எனும் அலுவலக தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like