வவுனியாவில் வயலின் சிறப்பு இசை நிகழ்வும் பயிற்சிப்பட்டறையும்

வடமாகாண கல்விபண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தலைமையில் யாழ். இந்திய துணைத்தாரகமானது இந்தியக்கலாச்சார உறவுகளுக்கான பேராயம் ஜ.சி.சி.ஆர் (ICCR) மற்றும் வடமாகாண கல்வி பண்ணபாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து வழங்கிய இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பிரால வயலின் இசைக்கலைஞர்களான மைசூர் கலாநிதி மஞ்சுநாத் மற்றும் நாகராஜ் சகோதரர்களின் வயலின் சிறப்பு இசை நிகழ்வும் பயிற்சிப்பட்டையும் இன்று (17.08.2017) காலை 10.30மணிக்கு வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ். இந்தியத்தணைத்தூதுவர் ஆ. நடராஜ், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் திரு. இ. இராதாகிருஷ்னண், கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு. எம். பி நடராஜ் , மாவட்ட செயலக கலாச்சார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் திரு. வீ. பிரதீபன், வவுனியா அன்பக சிறுவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

​வடமாகாணத்தில் இசை பயிலும் விஷேடமாக வயலின் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.​

You might also like