கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் அரச உத்தியோகத்தரொருவர் மீதான தாக்குதலை கண்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது கிளிநொச்சி கமநல சேவைகள் திணைக்களம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணியொன்று கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றது.

அத்துடன், அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரச கடமைக்கு இடையூறு விளைவித்த நபர்களை கைது செய்யக் கோரியும், கடும் சட்டநடவடிக்கை எடுக்கக் கோரியும் வலியுறுத்தி மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதிக்கு வெளிக்கள பணிக்காக சென்ற கமநல சேவைகள் நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது நால்வர் தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like