யாழில் பாழடைந்த தோட்டத்தில் இருந்து ஆவா குழுவின் மோட்டார் சைக்கிள் மீட்பு

ஆவா குழு குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று கொக்குவில் பிரதேசத்தில் பாழடைந்த தோட்டம் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படை முகாம் படையணி ஒன்று இன்று இந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றியுள்ளனர்.

உரிமையாளர் இல்லாத மோட்டார் சைக்கிள் ஒன்று கொக்குவில் பிரதேசத்தில் தோட்டம் ஒன்றில் காணப்படுவதாக அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இந்த மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் குற்றச் செயல்களுக்காக மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி விட்டு பின்னர், குறித்த தோட்டத்தில் மறைத்து வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

You might also like