வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் சந்திப்பு

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் நேற்று (17.08.2017) இரவு 7.00 மணி தொடக்கம் 7.45மணிவரை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

ஐ.நா அலுவலக விசேட பணியாளர் சோமஸ், தாயக தாய்மார், வவுனியா பிரஜைகள் குழு தலைவர் கோ.ராஜ்குமார் ஆகியோருடன் சுமார் 45நிமிடங்கள் இடம்பெற்ற இவ் சந்திப்பின் போது ஜனாதிபதியுடன் இருக்கும் காணாமல் ஆக்கப்பட்ட பெண்பிள்ளைகள் சம்பந்தமாவும், எவ்வாறு உங்களது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்ற விபரங்களை பெற்றுக்கொண்டார்.

நாங்கள் அரசாங்கத்திற்கு இதுவரையில் அழுத்தம் குடுத்துக்கொண்டு இருக்கின்றோம். இதற்கு முறையான திட்டங்களை நாங்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளோம். வெகு விரைவில் இதற்கு தீர்வினை பெற்றுத்தருவோம் என தெரிவித்தார்.

இன்றுடன் 170வது நாட்களாக வீதியில் தங்களது பிள்ளைகளை தேடி சுழற்சி முறையில் உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கும் இவர்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது?

You might also like