இலங்கையில் ‘சிங்கலே’ எனும் இரத்தம் இல்லை! வடமாகாண ஆளுநர்

இந்த நாட்டிற்கு முஸ்லிம்கள் வரும்போது ஒருபோதும் பெண்களை அழைத்து வரவில்லை. இங்குள்ள சிங்கள பெண்களையே திருமணம் செய்து கொண்டார்கள். அதேபோல் சிங்களவர்களும் இந்தியாவில் இருந்து தான் இங்கு வந்தார்கள்.

எனவே சிங்கலே எனும் இரத்தம் இலங்கையில் இல்லை என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ.சு.கட்சியின் முஸ்லிம் பிரிவு கூட்டம் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையில் முஸ்லிம் மக்கள் பண்டாரநாயக்க காலம் தொட்டு ஸ்ரீ.சு.கட்சியை ஆதரித்து வந்தார்கள்.

ஆனால், 30 வருட யுத்தத்தினால் தமிழ் கட்சி, சிங்கள கட்சி, முஸ்லிம் கட்சி என பிரிந்து நிற்கின்றோம்.

சிங்கலே எனும் இரத்தம் இலங்கையில் இல்லை. சகல இரத்தமும் ஒன்றாக கலந்தவையே என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

You might also like