புளியங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு ஒலிபெருக்கி தொகுதி மற்றும் தளபாடங்கள் வழங்கி வைப்பு

வவுனியா, செட்டிகுளம் பிரிவிற்குட்பட்ட குருக்கள் புதுக்குளத்தை அண்மித்த புளியங்குளம்  கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், முன்னைநாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய  மருத்துவர். பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2017இற்கான வருடாந்த நிதியொதுக்கீட்டில் ஒலிபெருக்கி உபகரணத்தொகுதி மற்றும் தளபாடங்கள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதனைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று  கிராம அபிவிருத்தி சங்க  செயலாளர் திரு.கரன் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரின் சார்பிலே அவரின் பிரத்தியேக செயலாளர் திரு.ப.சத்தியசீலன்,  இணைப்புச் செயலாளர்கள் திரு.பாலச்சந்திரன் சிந்துஜன், திரு.அ.சுரேந்தர் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த பொருட்களை வழங்கி வைத்தனர். இதன்போது கிராம மக்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like