வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஆத்மீக சுற்றுலா சென்ற முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகள்

வவுனியாவில் இயங்கும் முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகள் வியாழக்கிழமை வீ – 3 அமைப்பின் அனுசரணையில் மாவட்ட சமூகசேவை அலுவலகமூடாக யாழ்ப்பாணம் அழைத்துச் செல்லப்படுகின்றார்கள் . கூமாங்குளம் , வெளிக்குளம் ,பூந்தோட்டம் ,வவுனியா நகரம் ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகளே இவ்வாறு பயணிக்கின்றனர் .

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன் அவர்களின் தலைமையில் மாவட்ட சமூகசேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எஸ்.கே.வசந்தன் உளசமூகப் பணியாளர்கள் செல்வி இ.கிஸாந்தினி ஆகியோர் இதில் கலந்து மூத்தோருக்கு வழி காட்டிகளாக சேவை ஆற்றினர்.

காலை 7 மணிக்கு வவுனியா மாவட்ட அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பயணம் முறிகண்டி பிள்ளையார் அலயத்தில் காலை தரிசனங்களை மேற்கொண்டு பின் கைதடி அரச முதியோர் இல்லத்தில் உள்ள முதியோருடன் அனுபவப்பகிர்வில் ஈடுபட்டனர் .அத்தியட்சகர் திரு கிருபாகரன் இதனை நெறிப்படுத்தினார். நல்லுர்ர் ஆலயத்தில் முருகன் தரிசனத்தின் பின் துர்க்கா அன்னதான மண்டபத்தில் இவர்களுக்கென திரு ஆறுதிருமுருகன் திரு தவநாதன் ஆகியோர் விசேட மதிய பொசன ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளனர் .

பிற்பகல் மாகாண சமூகசேவைகள் திணைக்களப்பணிப்பாளர் திருமதி வனஜா செல்வராஜா அவர்களின் வழிகாட்டலில் மாகாணசமூக சேவை அலுவலகத்தை பார்வையிட்டனர் .அங்கு உதவிப்பணிப்பாளர் திரு எஸ்.முகுந்தன் அவர்கள் முதியோரை வரவேற்று உபசரித்து மகிழ்வித்தார் .

எந்நிதியும் தருவான் செல்வச்சசந்நிதியான் என்ற வாசகம் கொண்ட செல்வச்சந்நிதி ஆலயதரிசனம் வல்லிபுர ஆழ்வார் ஆலய தரிசனம் என்பவற்றையும் மேற்கொண்டனர் .

இவ்வாறான சுற்றுலாக்கள் மூத்தோரின் உளநல மேம்பாட்டிற்கு பெரிதும் ஆற்றுப்படுத்தலாக அமைவதுடன் அவர்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை தேடலுக்கும் நல்ல வழிகாட்டலாக அமையுமெனலாம் .

You might also like