வவுனியா மாவட்டத்தை சேர்ந்த முஹமட் சரிப் அனிஸ் ஈரானிய தூதுவராக தெரிவு செய்யப்பட்டமைக்கு கௌரவிப்பு

வவுனியா மாவட்டத்தினை பிறப்பிடமாக கொண்டவரும் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான, பொதுக்கொள்கைத்துறையின் சிரேஸ்ட விரிவுரையாளரும்,  அரசியல் ஆய்வாளருமாகிய கலாநிதி முஹமட் சரீப் அனிஸ் அவர்கள் ஈரானிய இஸ்ஸாமிய குடியரசுக்கான இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதுவராக அமைச்சர் அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை வவுனியா மக்கள், வர்த்தர்கள், சமூக சேவையாளர்கள், நலன்விரும்பிகள் அனைவரும் ஒன்றினைந்து கௌரவிக்கும் நிகழ்வு இன்று (18.08.2017) மாலை 4.30மணியளவில் வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வணிக  அமைச்சரும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன், வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் வி.ஜெயதிலக , அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் றகுமான், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப், நாச்சியாதுவ உதவி பிரதேச செயலாளர் ஜெ.மஹ்றூப், வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார், வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் கா.உதயராசா, பொதுமக்கள், சமுக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like