வவுனியாவில் றிஸாட் பதியுதீனின் வருகையினால் போக்குவரத்து ஸ்தம்பிதம் : வேடிக்கை பார்த்த பொலிஸார்

பொதுக்கொள்கைத்துறையின் சிரேஸ்ட விரிவுரையாளரும்,  அரசியல் ஆய்வாளருமாகிய கலாநிதி முஹமட் சரீப் அனிஸ் அவர்கள் ஈரானிய இஸ்ஸாமிய குடியரசுக்கான இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதுவராக நியமிக்கப்பட்டதையடுத்து அவரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (18.08.2017) வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு கைத்தொழில் மற்றும் வணிக  அமைச்சரும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் வருகை தந்திருந்தார் அவரின் வருகையினால் சுமார் 10நிமிடங்கள் வவுனியா-மன்னர் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது. போக்குவரத்தினை சீர் செய்யாமல் அமைச்சரை வரவேற்க்கும் நிகழ்வு முடியும் வரை போக்குவரத்தை பொலிஸார் தடை செய்தனர். இதனால் அவ்விடத்தில் பாரிய போக்குவரத்து தடை ஏற்ப்பட்டது.

இப் பாதையினை ஒருவழிப்பாதையாக மாற்றி அமைச்சரை வரவேற்றும் நிகழ்விற்கு பொலிஸார் அனுமதி வழங்காமல் ஏன் முழுமையாக போக்குவரத்தினை தடை செய்து வரவேற்பு நிகழ்வினை நடத்த அனுமதி வழங்கினார்கள். எங்கள் நாட்டின் ஜனாதிபதியின் வருகையின் போது கூட இவ்வாறு மக்களை அசேகரியப்படுத்துவதில்லை. ஒரு அமைச்சருக்காக பொலிஸார் முழுமையாக பாதையினை தடை செய்தமை கண்டனத்துக்குரிய விடயம் என சாரதிகள் மற்றும் பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

You might also like