கிளிநொச்சியில் சிறுமி துஷ்பிரயோகம்! சிறுமியின் தாயார் உள்ளிட்ட மூவர் கைது

கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமியின் தாய் உள்ளிட்ட மூவரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சிறுமி வழங்கிய முறைப்பாட்டிற்கு அமையவே, குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வயதிலிருந்து சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, நேற்று இரவு மூவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர்கள் மூவரையும் கிளிநொச்சி நீதவான நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like