இலங்கையில் அபூர்வ வகை மான் கண்டுபிடிப்பு!

இலங்கையில் அபூர்வ வகை மான் இனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மெதிரிகிரிய, யுதகனாவ பிரதேசத்தில் அரிய வகை வெள்ளை நிற மான் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யுதகனாவ பிரதேசத்தை சேர்ந்த ஆனந்த சிசிர குமார என்பவரின் வீட்டிற்கு அருகில் தனித்து விடப்பட்ட இந்த மான் குட்டி வீட்டிற்குள் வந்துள்ளது.

அந்த மான் குட்டியை கிரிதலை வனவிலங்கு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

மரபணு குறைபாடுகள் காரணமாக பிறக்கும் இந்த வகை வெள்ளை நிற மான் குட்டிகள் லட்சத்தில் ஒன்றையே காண முடியும் என வனவிலங்கு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

You might also like