வவுனியாவில் பரபரப்பான சூழலில் கூடுகிறது ரெலோ: பங்கேற்பதை தவிர்த்தார் டெனீஸ்வரன்

வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கு ரெலோவின் உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று கூடவுள்ளது.

எனினும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு பா.டெனீஸ்வரனிடம் கட்சியின் உயர்மட்டக் குழு அண்மையில் கோரியதுடன், அதற்கா ஒரு நாள் அவகாசத்தையும் வழங்கியிருந்தது.

ஆனால் அமைச்சுப் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று டெனீஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்க ரெலோவின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தை இன்று வவுனியாவில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதில் கலந்துகொள்ளுமாறு அமைச்சர் பா.டெனீஸ்வரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என கட்சியின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக டெனீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமது தனிப்பட்ட அலுவல் காரணமாக கொழும்புக்கு செல்வதால் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என கட்சிக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் டெனீஸ்வரன் கூறியுள்ளார்.

 

You might also like