வவுனியாவில் அமிர்தலிங்கத்திற்கு சிலை நிறுவுவதற்கு அனுமதி கிடைக்கவில்லை

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்ளாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கு வவுனியாவில் பொருத்தமான ஒரு இடத்தினைத் தெரிவு செய்து அன்னாரது சிலையினை நிறுவுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ள நிலையில் அதனை நிறுவுவதற்கு இடத்தினை தெரிவு செய்த நிலையில் குடியிருப்பு கிராம அபிவிருத்திச்சங்கம் அனுமதியளிப்பதற்கு தாமதப்படுத்திவருகின்றது இதன் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பாதுகாப்பற்ற பகுதியில் சிலையினை வைத்துக்கொண்டு அவதிப்பட்டுவருவதாக எழுத்தாளரும் சமூகசேவையாளரும் தமிழரசுக்கட்சியின் கடந்த 35வருடங்களாக சேவையாற்றும் கணேசபுரம் பகுதியிலுள்ள இரா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமிர்தலிங்கத்தின் சிலையினை நிறுவுவதற்கு கடந்த மூன்று வருடங்களாக இடத்தினைத் தெரிவு செய்வதிலும் அனுமதி பெறுவதிலும் காலம் கடந்து சென்றுவிட்டதே தவிர சிலையினை நிறுவுவதற்கு தற்போது ஒரு பொருத்தமான இடமான யாழ் வீதி வைத்தியசாலை சுற்றுவிட்ட வீதி சந்தி அருகில் நிறுவுவதற்கு பிரதேச செயலகம், நகரசபை ஆகியவற்றிடம் அனுமதியினை பெற்றுக் கொள்வதற்கு சிலையினை நிறுவுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இடம் குடியிருப்பு கிராம அபிவிருத்திச்சங்கத்திற்குள் வருவதால் அவர்களிடம் அனுமதிக்கடிதத்தினை கொடுத்துவிட்டு காத்திருக்கின்றேன்.

அவர்களிடமிருந்து அனுமதிக்கடிதம் வரும் பட்சத்தில் சிலையினை நிறுவுவதற்கான பணிகளை மேற்கொள்ள முடியும் என்று தந்தை செல்வா ஒரு காவியம், நாம் கண்ட தலைவர் அமிர்தலிங்கம், உலகப்போர் 1,2 ஆகிய நூலின் ஆசிரியரும் சமூகசேவையாளரும், தமிழரசுக்கட்சியில் கடந்த 35வருடங்களாக இருக்கும் இரா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சிலையினை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு சிலையினையும் தருவித்து ஒரு பாதகாப்பற்ற பகுதியில் பெறுமதிமிக்க சிலையினை தருவித்து வைத்துக்கொண்டு பெரும் சிரமத்திற்கு மத்தியில் இருந்து வருகின்றேன். இச்சிலையினை நிறுவுவதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி சிலையினை நிறுவுவதற்கு முன்வருமாறு அவர் கோரியுள்ளார்.

You might also like