வடக்கில் வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்திற்காக 5 நாள் சிரமதானம் செய்ய வேண்டுமாம்: மக்கள் விசனம்

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கியுள்ளது. அதனை பெறுவதற்கு 5 நாட்களுக்கு சிரமதானம் செய்ய வேண்டும் என கிராம அலுவலர்கள் வற்புறுத்துவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவடங்களும் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. அந்த மக்கள் தமது நாளாந்த சீவியத்தை கொண்டு நடத்த கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வரட்சி நிவாரணத்தைப் பெறுவதற்கு நாள் ஒன்றுக்கு 3 மணிநேரம் வீதம் 5 நாட்களுக்கு வேலை செய்தால் மட்டுமே நிவாரணம் வழங்கப் படும் என கிராம அலுவலர் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கலந்து கொள்ளாதவர்களுக்கு வரட்சி நிவாரணம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளாந்த கூலி வேலை செய்வோர், தனியார் துறைகளில் வேலை செய்வோர் எனப் பலரும் கடுமையாக பாதிப்படைந்ர்ள்ளனர். மன்னராட்சிக் கலத்தைப் போன்று நிவாரணத்திற்காக மக்களை அரச அதிகாரிகள் வேலை வாங்குவது குறித்து மக்கள் பலரும் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்த நிலை காணப்படுகின்றது.

You might also like