வவுனியாவில் பத்து வயது சிறுவனைப் பயன்படுத்தி நூதனமாக கொள்ளை! மடக்கிப் பிடித்த பொலிஸார்

வவுனியாவில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 10 வயது சிறுவன் உட்பட மூவர் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா, வேப்பங்குளம், பட்டக்காடு, நெளுக்குளம் போன்ற பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கருதப்படும் பட்டக்காடு பகுதியைச் சேர்ந்த இலங்கேஸ்வரன் அனுசாந்தன் என்ற பத்து வயது சிறுவன் மற்றும் அவனது சகோதரரான இலங்கேஸ்வரன் விஜிதகுமார் (வயது 18) என்பவருடன் வவுனியா நெளுக்குளம் குகன்நகர் பகுதியைச் சேர்ந்த இருபது வயதான விஜயகுமார் விஜயசாந்தன் என்பவரும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் யாரும் இல்லாத வீடுகளில் இச்சிறுவனின் உதவியுடன் வீடுகளில் காணப்படும் சிறிய துளைகள் ஊடாக சிறுவனை வீட்டினுள் புகுத்தி கொள்ளைகளில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றியுள்ளதாகவும் அத்துடன் 5 லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தையும் இவர்கள் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like