திருகோணமலையில் 18 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 18 வயதான இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனையாவெளிப் பிரதேசம் யாட் அடைவீதியில் வசித்து வந்த இளைஞரே இவ்வாறு 21.08.2017 முற்பகல் 11 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

காலையில் மகன் வேலைக்கு செல்லாததால் தான் முரண்பட்டுக் கொண்டதாகவும், பின்னர் கோயிலுக்கு சென்று திரும்பி வந்த போது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டதாகவும் தற்கொலை செய்து கொண்டவரின் தாயார் தெரிவித்தார்.

அத்துடன், 10.00 மணி தொடக்கம் 10.30 வரையிலான காலப்பகுதில் தற்கொலை செய்து கொண்ட நபர், அவசரமாக தொலைபேசி மீள்நிரப்பு அட்டை ஒன்றை கொள்வனவு செய்து போனதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், உயிரிழந்தவரின் தொலைபேசி லொக் செய்யப்பட்டிருப்பதனால் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணத்தை கண்டறிவதில் சிரமம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like