கிளிநொச்சியில் வறட்சி நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்கு சிரமதானப் பணியில் ஈடுபட வேண்டும் : கவலையில் மக்கள்

கிளிநொச்சியில் வறட்சி நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்காக சிரமதானப் பணியில் ஈடுபட வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் நாடாளவிய ரீதியில் ஏற்பட்ட வறட்சி நிலையினால் விவசாயிகள் உட்பட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் தற்பொழுது நாடளாவிய ரீதியில் வறட்சி நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

எனினும் நிவாரணத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் வேலை செய்ய வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இன்று இரண்டாவது நாளாகவும் நிவாரணத்திற்கான வேலை செய்துள்ளதாகவும், அடுத்து வரும் நாட்களிலும் இவ்வாறு செய்தால் தான் தமக்கு நிவாரணம் கிடைக்கும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like