வவுனியாவில் 92,659 பேருக்கு வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை

வவுனியா மாவட்டத்தில் 25,987 குடும்பங்களை சேர்ந்த 92,659 பேர் வறட்சி உலர் உணவு திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு 123 மில்லியன் ரூபா பெறுமதியில் உலர் உணவு வழங்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் 13,993 குடும்பங்களை சேர்ந்த 51,228 பேரும் வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 4042 குடும்பங்களைச் சேர்ந்த 13,085 பேரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், வவுனியா தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் 2691 குடும்பங்களை சேர்ந்த 9350 பேரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவில் 5261 குடும்பங்களை சேர்ந்த 18,996 பேரும் நிவாரணம் பெறும் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிவாரணத்தினை பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதற்காக கிராம சேவகர் பிரிவு ரீதியாக பொது இடங்களில் சிரமதானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

You might also like