வவுனியாவில் வெடிக்காத நிலையில் கைக்குண்டுகள் மீட்பு

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியிலுள்ள வயல் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் கைக்குண்டுகளை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியிலுள்ள வயல் காணியை நேற்றைய தினம் (22.08) மாலை  நிலத்தை பண்படுத்தும் போது அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டுகள் இருப்பதனை அவதானித்த உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் அப்பகுதியில் கைக்குண்டுகள்-06 , பரா- 01  மேலும் அப்பகுதியில்  தேடுதல் மேற்கொண்டபோது  குண்டுகள் இருப்பதாகவும் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அப்பகுதியை மேலும் அகழ்வு பணியை மேற்கொள்ளவிருப்பதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

You might also like