பூவரசங்குளம் கிராம சேவையாளரிடம் தகவல் பெறச் சென்ற ஊடகவியலாளர்களை விரட்டிய கிராம சேவையாளர்

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள கிராம அலுவலரின் அலுகத்திற்கு தகவல் பெறுவதற்காக சென்ற ஊடகவியலாளர்களை அலுவலக வாயிலில் வைத்து பலர் முன்னிலையில் வெளியே செல்லுங்கள் என அப்பகுதி கிராம அலுவலர் வெளியேற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வரட்சி நிவாரணம் வழங்கங்கலில் அப்பகுதியில் பல மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை கிராம அலுவலரிடம் கேட்கச் சென்ற மக்களை கிராம அலுவலர் அநாகரிகமாக பேசி அனுப்புவதாகவும் கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற ஊடகவியலாளர்கள் தமக்கு கிடைத்த தகவலின் உண்மை தன்மை குறித்து அறிவதற்காக கிராம அலுவலரின் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்ட போது அலுவலக வாயிலுக்கு வந்த அப்பகுதி கிராம அலுவலர், ஊடகவியலாளர்களை பார்த்து ‘ உங்களை யார் உள்ளே விட்டது. உடனே வெளியே செல்லுங்கள் என அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் அநாகரிகமாக நடந்து அவர்களை வெளியேற்றியிருந்தார்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அவர்களின் கவனத்திற்கு குறித்த விடயத்தை தொலைபேசி மூலம் கொண்டு வந்திருந்ததுடன், மக்களிடம் அலுவலகத்திற்கு வெளியில் வைத்து செய்தி சேகரித்து விட்டு திரும்பியிருந்தனர்.

ஊடகசுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அரசதங்கம் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அவ் அரசாங்கத்தின் கீழ் மக்கள் வரிப்பணத்தில் செயற்படும் அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், பலர் முன்னிலையில் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொள்வது ஊடகசுதந்திரத்தை மீறும் செயல் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் வரட்சி நிவாரணம் வழங்கவில்லை என கேட்ட மக்களுடன் அநாகரிகமாக நடந்த கிராம அலுவலர்: மக்கள் ஆர்ப்பாட்டம்

 

You might also like