வவுனியாவில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளுக்கு 14நாட்கள் விளக்கமறியல்

வவுனியாவில் இன்று (23.08.2017) மதியம் 11.00மணியளவில் லஞ்சம் வாங்கிய வன.வள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் இருவரை லஞ்ச,ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் கையும் கலவுமாக பிடித்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள வன,வள பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் குட்டி விதான ஆராச்சிகே, சானிக நிஷாந்த அமரவீர ஆகிய இரு உத்தியோகத்தர்கள் இன்று மதியம் 11.00மணியளவில் அலுவலகத்தில் வைத்து லஞ்சம் வாங்கிய சமயத்தில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்களினால் வழங்கப்பட்ட ரகசிய முறைப்பாட்டிற்கு அமைவாகவே இவ் திடிர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு உத்தியோகத்தர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இரு உத்தியோகத்தர்களும் இன்று மாலை வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்ட சமயத்தில் இருவருக்கு 14நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

You might also like