கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலகங்களுக்கான தண்ணீர் பௌசர்கள் கையளிப்பு

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால் இன்றைய தினம் கிளிநொச்சி கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்களிடம் தண்ணீர் பௌசர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

வறட்சியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நீர் வழங்கும் முகமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் உழவு இயந்திரங்களுடனான தண்ணீர் பௌசர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள பௌசர்கள் கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயராணி ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்கு 4 தண்ணீர் பௌசர்களும், பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேசங்களுக்கு 3 தண்ணீர் பௌசர்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like