இலங்கையின் ஏனைய பொலிஸாருக்கு முன்னுதாரனமாக அமைந்துள்ள வவுனியா பொலிஸாரின் செயற்பாடு

வவுனியாவில் வர்த்தக பிரமுகர்களினால் விஷேட தேவைக்குட்பட்ட சிறுவனுக்கு மலசலகூடத்துடன் படுக்கை அறை அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா வர்த்தகர் சங்கத்திலுள்ள வர்த்தகப்பிரமுகர்கள் ஒன்றிணைந்து விஷேட தேவைக்குட்பட்ட 15வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு படுக்கை அறையுடன் கூடிய மலசலகூட கட்டடத் தொகுதியை அமைத்துக்கொடுத்துள்ளனர்.

இந் நிகழ்வு நேற்று (24.08) மாலை3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா மாமடு, நெலுங்குளம் பகுதியில் வசித்து வரும் அனோமாகுமாரி என்ற பெண்மணிக்கு நிலுச லக்மால் என்ற 15வயதுடைய வயது குன்றிய விஷேட தேவைக்குட்பட்ட சிறுவனை கணவனின் உதவி இன்றி வைத்து பராமரித்து வருவதில் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளதாகவும் அதற்காக தனியான படுக்கை அறையுடன் கூடிய மலசல கூட கட்டடத் தொகுதி ஒன்றினை அமைத்துத்தருமாறு வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னார் கோரியுள்ளார்.

இதையடுத்து வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் வவுனியா வர்த்தக சங்க பிரமுகர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து வர்த்தக பிரமுகர்கள் 4பேர் ஒன்றிணைந்து இரண்டு இலட்சத்தி ஜம்பதினாயிரம் ரூபா பெறுமதியான படுக்கை அறையுடன் கூடிய மலசல கட்டடத்தினை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கலந்து கொண்டு பயனாளிகளிடம் புதிய கட்டிடத்தினைக் கைளித்து வைக்கப்பட்டது. வர்த்தக பிரமுகர்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது. விஷேட தேவைக்குட்பட்ட சிறுவனின் தேவைக்கென பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா வர்த்தகர் சங்க செயலாளர்  ஜி. ஸ்ரீஸ்கந்தராஜா. எம்.கே. லியகத் அலி, ஆ. அம்பிகைபாகன், எஸ். ஆனந்தராஜா, ரி. சிவரூபன், எஸ். சுஜன், வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பொதுமக்கள் பௌத்த சமயத்தலைவர்கள், மாமடு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like